1730 VINCENT MASSEY DRIVE, CORNWALL, ON K6H 5R6 CANADA
Mon-Sat: 9.00am To 7.00pm
Follow Us :
Contact US +1 (416) 939-4921

பிரதோச விரதம்

பிரதோச விரதம்

இவ்விரதம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசையிலிருந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசியில் கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் சனிக்கிழமைகளில் வரும் சனிப்பிரதோசம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுப்படுகிறது.

இவ்விரதமுறையை மேற்கொள்வோர் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் வளர்பிறை சனிப்பிரதோசத்திலிருந்து தொடங்கி தொடர்ந்து பின்பற்றுகின்றனர். பிரதோச காலம் என்பது சாயங்காலம் 4.00மணி முதல் 7.00வரை உள்ள நேரமாகும்.

3

இவ்விரதமுறையில் மேற்கொள்வோர் அதிகாலையில் நித்திய கடன்களை முடித்து நீராடி சிவவழிபாடு செய்கின்றனர். பகலில் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கின்றனர். பகலில் உணவு உண்ணாமலும், நீர்அருந்தாமலும் விரதத்தினை மேற்கொள்கின்றனர்.

மாலை வேளையில் சிவாலயத்தில் நடைபெறும் வழிபாட்டு முறைகளில் கலந்து கொண்டு பின் உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்கின்றனர்.

இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் வாழ்வின் பாவங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். அறிவுத்திறன் மேம்படும். நினைவாற்றல் பெருகும். கடன், வறுமை, நோய், அகாலமரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவை நீங்கும்.